காதல் மோகம் !
தின்னா நிலவொழியில்
மாமலர் தேன் துளியாய் மனக்குழியில் - பிசுப்பிசுத்த
கோதைக்கு என் விரகதாப மடல் விரித்தேன் !
என் விரல் தீண்டா பூஉடல் நோவுதங்கே !
விந்தமுது எள்ளி நகைத்தாட கூடுதிங்கே !
என் மான்விழி மாது பசலையில் பாய் விரித்தாள் !
பஞ்சனையில் வஞ்சிக்கு வாய்மொழியில் தேன் தெளித்தேன் !
மோகநிலை தானுணர்ந்து ஆடை திருத்தும் பால்நிலவு,
மான்விழி மயங்கா விரசம் தீர உரைத்திடுமோ !
பொன்னுடல் போர்த்தி விரகதனல் தனித்திடால்
தனிவதுண்டோ அந்த காதல் மோகம் (பாரதிதாசன்)!!
-சுந்தர்.ப
No comments:
Post a Comment