என் கிராமத்து வாசம் !!
-சுந்தர்
மேற்கு மலைத்தொடரோரம் தூறல் சிந்தும்
என் தூரத்து பூர்வீகமாய் !
விடுமுறை நாட்களை கையில் ஏந்தி எனை
வரவேற்க காத்துநிற்கும் என் கிராமத்து அதிகாலை கார்மேகமாய் !
இரவெலாம் மழையில் காய்ந்து எஞ்சிய துளிகளில்
சிலிர்த்து நிற்கும் பச்சை விரித்த புல்வெளிகளாய் !
செவி நாண சுரம் சேர்க்கும் விடலைப்பெண் கால் கொலுசாய்
புத்திக்குள் சலசலக்கும் ஓடைக்கரையாய் !
பச்சை பாசி மொத்தமாய் குத்தகை ஏந்திக்கொண்ட
கோவில் குளக் கரையாய் !
கிள்ளை மொழி கேட்டு நெஞ்சனைக்கும்
அன்னை மொழி நேசமாய் -
எனை
தன்னுள் தொலைத்துக்கொள்ளும் என்
கிராமத்து வாசம் என்றும் அடி நெஞ்சில்
மாறா பூவின் சுவாசமாய் !!
No comments:
Post a Comment