ஆனந்தக் கூத்தன் !!
அடங்காத கூட்டம் ஓன்று அடிவாரம் தனை மொய்த்து
ஓயாத நாதமொன்று சிவநாமம் தனை மென்று
ரீங்காரம் மீட்டுதடி என் புத்திக்குள் ஏற்றுதடி !
தில்லைக்கும் எல்லையுண்டு ஆனந்த கூத்தனுண்டு !
சேர்க்காத புண்ணியமாய் ஆலகால விஷமும் உண்டு !
அம்பலத்தில் ஏறிநின்று ஆடிய ஆட்டமெல்லாம்
சொப்பனத்தில் கலைந்ததுபோல்,
வந்த இடம் மறந்து தேடுகிறாய் மானிடமே !
சித்தனென்றும் சிவனென்றும் ஓடுகின்ற கூடமெல்லாம்
முக்திக்கும் பரிகாரம் உண்டென்று பிதற்றுவதேன் !
சடையேற்று ஆடி நிற்கும் ஆனந்த கூத்தன்
அவன் படியேறி பாடி நின்றேன் !
அவனுள் கண் மூடி நான் கலந்தேன் !!
-சுந்தர்.ப
No comments:
Post a Comment