கடல் மேல் குமிழிகள் !!
வெண்ணிலவும் மின்னொழியும் உரசிக்கொள்ளும் – அந்நொடியில்
அந்தி வானம் துயில் களையும் நடுநிசியில்,
வாடை வாசம் மாறா தென்றல் எனை சீண்ட - வெண்ணிற
கடற் குமிழிகள் என் நகக்கண்ணின் இமை திறந்தன !!
முலுமதியின் பிரதிபலிப்பாய் தனி கடலாய் நான் இருந்தேன் !!
நுரை சிந்தும்
மணல் வெளியல் !
காற்று வாங்க கால் பதித்தேன் - மறந்தது அந்த
காகிதமும் என் பேனா இதழும் !!
காதல் சொல்ல யாரும் இல்லை ,
காதல் சொன்ன பெண்ணும் இல்லை !!
வந்ததெலாம் வாங்கி கொண்டால்
ஏந்தி கொள்ள யாரும் இல்லை !!
தந்ததை நினில் கரைத்து விட்டு வெறும் கையில்
வீடு சென்றேன் என் கடல் நீரே !!
No comments:
Post a Comment