ஒரு பொழுதில் மடி தழுவும் பிள்ளை இரண்டு !
யசோதைக்கும் ராதைக்கும் வண்ணம் ஒன்று !
மண்ணை உண்ட கண்ணன் தான் மஞ்சம் வென்றான் !
வென்றவன் தான் கை நீட்டி வெண்ணெய் என்றான் !
கண்ணன் தான் மன்னன் என்னும் கோதை உள்ளம் !
கண்ணனா நானா என்றால் என்னவாகும் !
மடி இரண்டு விழி இரண்டு தந்த கண்ணா ன் !
ஒரு நெஞ்சில் இருதலை அன்பை பற்று வைத்தான் !
அணுவிற்கும் அனுபவம் கற்றுத்தந்தான்!
நாடகம் அரங்கேற இன்றோர் மேடை கொண்டான் !
ஒருபொழுதும் கலங்கா கோதை உள்ளம்,
இரு பொருள் வரியாய் திண்ணமாகும் !!
-சுந்தர்.ப
No comments:
Post a Comment