கனவு
என் புரிதலின் மதநீர்ச் சுரப்பிகள் !!
கட்டவிழ்க்கா
காலச் சிதறல்களை
கனத்துப் போகா எச்சரிக்கும்
!
என்
புனை உலகின் வெந்நீர் ஊற்றுகளாய், -
இரவுகளை
கதகதப்பில் மீட்க்கும் !
முட்டித்
தீர்க்கும் காலக் கொடுமைகளை,
தட்டிக் கொடுத்து தனல் ஆற்றும் !
பசித்துக்
கிடக்கும் பகலவன் கரங்களை,
பால் நிலவில் பசி ஆற்றும் !
வர்ணம்
மறந்த பகல் நேரப் பக்கங்களை -
கருப்பு,
வெள்ளையில் எத்தனிக்கும் !
பகல்
கூட இடம் கொடுத்தால் புனை தொழில் புரியும் !
மூன்று
காலங்களையும் முன் பரப்பி,
ஆசைதீரத் தின்று தீர்க்கும் !
நிழலாடும்
குரோதங்களை மதி -
மயங்கி, இழைப்பாறச் செய்யும் !
குரல்
மங்கும் தூரங்களை, சலனம் இல்லாச் -
சாடலில், மதில் தாண்டும் !
நிலம்
சாயும் மேகங்களை, திரை மறைவில்
தாங்கிக் கொள் தோழன் அது !
விரல்
தனித்துப் போகாப் பயணங்களை, என்னில்
பழக்கப்படுத்திக்
கொள்ளும் !
இந்த
மதகுகள்
மதம்
கொஞ்சம், பலம் மிஞ்சும் -
பாதைகளை
என் பாதங்களில் விதைக்கிறது !
- சுந்தர்.ப
No comments:
Post a Comment