பிள்ளை நிழல் !
என் வர்ணனையில் பிறக்கும் -சிறு
தாழம்பூ நாணத்தை நுனி மூக்கின் கோபத்தில்
மறைக்கும் அந்த வாதமும் !
தன்னை வாசிக்க இடம் தந்ததும் இல்லை,
என்னை நேசிக்க கனம் இல்லை !!
ஆண்மையின் ஆழத்தை காட்டித்தந்தாள்,
அதில் கொஞ்சம் பெண்மையையும் ஊற்றி சென்றால் !!
என்னை ஆட்கொள்ளும், பின் மீட்டெடுக்கும்
வித்தையும் கொண்டால் !!
என் மௌனம் கலைக்கா புல்லாங்குழல்,
தன் நிஜம் மாறா சிறு பிள்ளை நிழல் !!
No comments:
Post a Comment