பகை சாடும் புலிகள் - கவி பாடும் விந்தை
எம் தமிழ் குடியின் சொந்தமன்றோ !!
தமிழ்ச்சீமை தனில் வாழும்
பெண்புலி கூட்டம் ஓன்று
பகை சாடல் தான் மறந்து
தமிழ் தேடி ஓடுதடி !
புள்ளி மான் கூட்டம் எல்லாம்
தளிர்த்தொங்கி கூடுதடி !
வீரம் சொன்ன பாரதிக்கும்- இது
தோன்றாமல் போனதடி !
பாட்டிடைத் தலைவன் என்றும்,
பாட்டு எம் சொந்தம் என்றும்,
பாவலர் கூடம் எல்லாம் பதுங்கும்
புலி சாட்டம் கண்டு !
பாரதிக்கும் கனவிதுவே !
சுதந்திரம் நின் கையில் பெண்ணே !!
-சுந்தர்.ப
No comments:
Post a Comment