Nov 26, 2014

மகள் என்னும் மழை அழகு !!


மழையும் என் மகளும் ஈரழகு!! ஊன் கலந்தால் நூறழகு !!

பால் மணம் வழிந்தோடும் தும்பைப் பூம்விரல்கள் - (மகள்)
மண் மணம் உயிர்ஜெனிக்கும் ஆதாரத் தேன் துளிகள் – (மழை)
மழலை மொழியாவும் மதி தின்னும் மாருதங்கள் - (மகள்)
அடி வானின் நற்றனமாய் முனுமுனுக்கும் மத்தளங்கள் - (மழை)
சீன்டலும் தீண்டலுமாய் ஒரு நூறுப் பொற்க்கரங்கள் - (மகள்)
அள்ளி நெஞ்சனைக்கும் ஆயிரம் மழைத் துளிகள் - (மழை)
வாழ்வில் அர்த்தப்படும் அழகிய மணித்துளிகள் - (மகள்)
சாரலின் கோர்வையில் தோல் உரிக்கும் நீர் நிலைகள் - (மழை)
பூப்பின் பூரணமாய் தாமரை மதி முகங்கள் - (மகள்)
கார்மேகம் அடைத்து ஒழுகும் அடை மழைத் தோரணங்கள் - (மழை)
நிறம் மாறும் பூவனமாய் தினம் ஒரு முகம் புனைந்து,
மகள் என்னும் பாத்திரத்தை புடம் செய்யும் பெண் இனம் - (மகள்)
திசை மாறும் பருவங்களின் திரை மூடும் மதி போல,
தினம் ஒரு புதுத் துளியாய் சுரம் சேர்க்கும் யாழினம் - (மழை)
திருமணம் எனும் ஓர் மலர் பூனும் மான் இனம்,
அவள் கோலம் அழகென்னும் அட்சையம் - (மகள்)
கடை விழி அலை ஆடும் குளக்கரையின்,
மழை விரிப்பில் ஈடாகும் அழகு ஏது - (மழை)
மகள் என்னும் மகள் ஈந்த - மழலை
முடிச்சு ஒன்று, கரம் ஏற்றி விழி நிறைக்க,
முன் ஜென்ம நியாபகமாய் மகரந்த மழை நனைந்து,
என் தாயின் கதகதப்பில் அடை காணும் முடிச்சானேன் - (மகள்)
மழை அழகு, மகள் அழகு,
ஓர் மழைக் கால பின் பொழுதில் நிழலாடும் நினைவு அழகு !!

-    -  சுந்தர்.ப

No comments: