Oct 31, 2014

அன்பு !!


             “ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
               புன்கணீர் பூசல் தரும் “

v  மழைக் கால மனக்குழியின் ,
 மண்வாசம் கூச்சரிப்பாய் !
v  தும்பை  பூஞ்சிரிப்பின்
அதிகாலை  பாய் விரிப்பாய் !
v  மெளனத் தேன் தெளிக்கும்,
அன்பென்னும் ஓர் செண்பகப் பூ !
v  கருவறை கானங்களை விரல் நுனி
விருந்தாக்கும் அன்னை மனம் !
v  மழலை முகம் யாவும் மகள் என்னும்,
சுருதி சேர்க்கும் தந்தை குணம் !
v  எட்டாப் பொருளாய் பசிப்பிணி
தீர்க்கும் தெய்வப் பதம் !
v  பயிர் வாட , மனம் வாடும் மார்க்கங்களின்
 பிள்ளை முகம் !
v  ஏழ்மை தோள் தாங்கும் தோழன்
என்னும் தேரின் திடம் !
v  கரம் நோக கொடை ஈனும்
அறம் சேர் மன்னர் இனம் !
v  இரத்த சொந்தங்களின் எல்லை தாண்டி அன்பில்
பதைப் பதைக்கும் ஏழை குணம் !   
v  சாதி மாத ஆழிகளின் இடை தாண்டி
அடி வானில் அர்த்தப்படும் அன்பின் நிறம் !
v  அன்பு என்னும் மூர்க்கத்தை அடிநாத வலை விரிப்பாய்
உயிர் காக்கும் பூமித்தாயின் பால் மணம் !


-சுந்தர்.

Oct 8, 2014

அறம்



அறம் ஏற்றும் ஆர்ப்பறிப்புகளில்,
ஊறித் திளைக்கும் - நாட்குறிப்புகளின்,
தடம் இல்லாத் தாழ்வாரங்கள்
மொவ்னமாய் மழை ஈனுகின்றன !
ஒட்டிப் பிறந்தவன் - என்றும்,
அறம் உதிர்க்கும் காரணங்களை
அடிக் கோடிட்டு காட்டுவதில்லை !!
ப.சுந்தர்.
(அறம் - ஜெய மோகன் !!)

முக்தி !!


கண்டீபம் கடை நோக,
கார் முகில் விழி நோக !
தமிழ் யானை தந்தம் கொண்டு,
ஏர் ஓடும் உழவன் உண்டு !
வள்ளுவம் வான் நிறைக்க,
வைகறை தேன் தெளிக்கும் !
வாழ்வின் முடிச்சு அவிழ்க்கும்,
பாரத போர் முழக்கம் !
மந்திரம் தந்தைக்கு என்று,
வழக்குறை பிள்ளை உண்டு !
ஏகலை சாத்தியமும் ஆயிரம்,
மண்ணில் உண்டு !
அறம் இன்றி அமையா
உலகென்று என்றும் உண்டு !
முடி துறந்து இடை மெலிந்து,
யாத்திரம் என்பதெல்லாம் !
குருவின் அடிதேடி
முக்தியின் மீட்டலுக்கே !
குரு வென்பது யாதெனில்,
அகம் தேடும் பாதை ஒன்றே !!
- ப.சுந்தர்