Jan 14, 2014

திருவிழாக் காத்தாடி !!



திருவிழாக் காத்தாடி !!

அப்படியும் இப்படியுமா, வருஷம் ஆறு ஓடிடுச்சி !
ஆறாத தடம் ஏதோ, அடிநெஞ்சுல தேங்கிடிச்சி !  
தூரத்துக் கிராமத்துல, கொல சாமிக் கோயிலில !
உரிக் கம்பும், தோரணமும், ராட்டின காரனுமா !
திருவிழாக் கூட்டத்த, கூத்தாடித் தாங்களிச்சோம் !
காத்தாடி தாங் கெறங்க, விரல் கொஞ்சம் வங்கிடிச்சி !
தொட்டு வச்ச மஞ்சக்கறை, புது சட்டையில மாறேல !
குறையாம நான் நெறச்ச, வீதி இன்னும் தீரல !
கடை கன்னித் தோரணமும், களியாட்டக் கூடரமும் !
மேளதாளம் வாய் முழங்க, செண்பகப்பூ ஊர் மணக்க !
அருள் வாக்கு பஞ்சமில்ல, வாரித்தர சாமி உண்டு !
கடுகும் சிந்தாத காலடி ஓடையில  !
தெரியாம நான் தொலைச்ச, எங் கைவிரல் ரேக ஒன்னு !
புதுசட்டை மஞ்சையைத் தான், முகம் பூரா அப்பிக்கிட்டு !
முறை ஒன்னு சொல்லிக்கிட்டு, முன் சிரிப்ப சிந்திக்கிட்டு !
காத தூரம் ஓடி நின்னு,
சொப்பணத்துக் கூச்சலில, கதை  சொல்லிப் பாடுது !
காலடி தடங் கலைஞ்ச வீதி என்ன தேடுது !!

- சுந்தர் .ப 

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவியில் செப்பிய வார்த்தைகள்
வாழ்விடம் தேடிய வரிகள்
என்மனதில் நீந்தியது.
அழகிய கவிகண்டு மகிழ்ந்தேன்

தங்களின் வலைப்பகம் வருவது முதல்தடவை இனி என்வருகை தொடரும்.பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-