நான் மாடக்கூடலுக்குள்,
கதை செல்லும் ஊடலுக்குள் !
முற்றம் மணம் நிறைக்கும் -
கதம்பக்கூடைகளும்..! தை மிஞ்சிப் போனபின்னும்,
வழிந்தோடா மார்கழியாய்..!
முழங்கால் முறை செய்ய,
மஞ்சள் திரை ஓடி !
ஊமத்தம் பூ உதிரும் -
வைகை நீராடி..! குழல் சிந்தும் தேனோடு -
வாரிப்பூ சூடி,
மாமன் தேரோடும் வழி -
நீளக்காத்து நின்றாள்..! உச்சி முகர்ந்துண்ணும் -
செஞ்சாந்து கோலங்களும்,
நெற்றி வழிந்தொழுகும் -
வியர்வை நாளங்களும்..,
ஒற்றைப் பனைமரத்தின் இடை -
உரசும் மாங்கொம்பாய்..
பூத்து காய்காய்த்து,
வண்டுண்ணும் மாங்கனியாய்...! கூரைப் பட்டுடுத்தி,
ஒய்யார மையிட்டு !
காதல் அதில் கசிய,
கடைவிழி காட்டி நின்றாள்..!
மாமன் கண் முன்னே -
தாவணி போட்ட நெஞ்சு,
காமன் கணைமீட்டும் -
செங்கரும்பு ஆனதிங்கு...!
முற்றத்து மழை சிப்பும்,
தாழ்வாரப் பூவிரிப்புமாய் !
நின் திமிர் மிஞ்சும் வெட்கம்,
என் துயில் தின்னப்பார்க்குதடி...!!
சுந்தர்.ப
1 comment:
வணக்கம்
தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
எந்த கவிதை என்று நாங்கள் இனங்கான முடியாது.அதனால்இப்படி தலைப்பிட்டு போடுங்கள் கவிதையை.
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment