கார்கோட மேகம் ஓன்று சீறிச்
சிந்தும் திவளைகளில்
சிலிர்த்தது இந்த காதல்
விந்து !
இருள் தின்னும் அந்தி
நுழைவுக்குள் நெஞ்சுறைய
கொட்டித் தீர்த்த மழைக்காலம் ஓன்று !
ஒரு திங்கள் கூத்தாடிகளின்
படையெடுப்பாய்,
எனை மொய்த்த காதல் ஈசல் !
நெஞ்சனைக்க காத்து நின்ற
காலம் யாவும்,
மூச்சிறைக்க முட்டிக்கொண்ட
நேரம் அது !
மலர் உண்ணும் காதல் வண்டு
ஓன்று செவி நுழைய
துடித்தனன் காளை உள்ளம் !
துயிழாது, துவளாது,
தூரத்துப் பாவை -
விழி உண்ணும் விரதம் கொண்டு
!
வண்டு உடைத்த மாங்கனியாய்
காதல் கனிய,
அவள் அந்தரங்க மனக்குகையில்
மாட்டிக்கொண்ட
பேதை வண்டினம் நான் !
தேன் உண்ணும் தொழில்
மறந்து, மலர் உண்ணும்
வண்டானால், ஊடல் இன்றி
போவதுண்டோ !
அவள் ஊடல் என்னும் மொட்டு
உதிர்க்க,
மோகம் தான் கூடுது இங்கே !
அவள் வண்டு உண்ணும் மலர்
ஆனால்,
எனை உண்ணும் இதழ் தேன் சுவை
தானே !
ஊடல் கொஞ்சம், கூடல்
கொஞ்சம்
மாறி மாறித் தேடிக்கொண்டேன்
!
பேடை அவள் காதலுக்கு
கார்முகில்
தூது சொன்னேன் !
காலம் தாண்டி கூடி
நின்றும்,
காதல் என் கையில் அன்றோ !
அறியக் காலம் கொண்டு
அலைந்து,
தேடிக் காதல் இன்று !
எனைக் கொஞ்சம் அவள்
சேர்த்து,
எனில் கொஞ்சம் அவள்
சேர்ந்து !
கூடாத மஞ்சம் கூட,
அவள் வாசம் சூடிக் கொள்ள !
சேரா திசை எட்டும்,
காதல் சிந்தி காதல் ஆகும் !
மதியை ஒரு மகள்,
கார்குழல் சூடி நின்றாள் !
தேக விருந்துண்ணும் சூத்திரம்
தேடிச் சொன்னால் !
முத்து ஒழுகும் மஞ்சத்
திறவுகள்,
தனில் ஏந்தும் மாதுளையே !
அவள் மாடக் கூடலிலே,
மோகம் தின்னுத் தெளிந்தேன் !
காணும் திசை எங்கும் நான்
விதைத்தேன்,
காதல் இதழ் செழிக்க அவள்
தேன் தெளித்தாள் !
காதல் எனும் கொட்டகைக்குள்,
என் காதல்
அடைப்பதற்க்கில்லை !
மோகக் தியான காமம் என்னும்,
அஞ்சரைக்கும் சொந்தம் இல்லை
!
உயிர் ஜெனிக்கா குழந்தை
போல,
என் பெயர் இல்லாக் காதல்
அம்மா !!
சுந்தர்.ப
1 comment:
வணக்கம்
கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் இரசித்து படித்தேன் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment