மீட்டும்
விரல் அழகு,
உயிர் உருகும் யாழிசை ஓர்
அழகு !
குவளைக்
காதழகு,
அவள் இதழ் பதித்தாள் தேநீர்ச்
சுவை அழகு !
பூப்பில்
பெண் அழகு,
முந்திக்
கொள்ளும் தாய்மை என்னும் பேரழகு !
மொளனம்
ஓர் அழகு,
அதில் விழி பேசும் மொழி
அழகு !
மழலை குறும்பு அழகு,
துயில்கையில்
தும்பைப் பூ அழகு !
நித்திரையில்
மதி அழகு, சொப்பணம் நூறழகு
!
மழைக் கால முற்றங்களும்,
மணக் கோல தோரணங்களும் என்றும்
அழகு !
நோய்க்கு
மருந்தழகு,
உறவின் கதகதப்பில் நோயும்
ஓர் அழகு !
தனிமை ஓர் அழகு, தோள்
சாய்ந்தால் ஈரழகு !
பால் குட நீர் அழகு,
பசி என்றும் பேரழகு !
முதுமை
முழு அழகு,
மழலை விரல் நனைத்தாள் கூடும்
ஓர் அழகு !
நட்பென்னும்
தேர் அழகு,
நின்றாலும்
நகர்ந்தாலும் பேரழகு !
திருவிழாக்
காலங்களும்,
திரி சங்கு மடங்களும் நினைத்தாலே
அழகு !
வாழ்வை
அழகாக்கும் காதல் என்னும் தீ
அழகு !
கண்ணீர்த்
துளி அழகு, காரணங்கள் ஒத்தி
வைத்தாள் !
திருமணத்
தோள் என்றும், துறவுக்கு முன் அழகு !
இரவின்
நிறம் அழகு, நித்திரைக்குள் நிலவு
அழகு !
தூரத்து
ஊர் அழகு, மழைக் குடைக்குள்
குளிர் அழகு !
கோப,தபங்களும் சிறு நேரம் தான்
அழகு !
கடை விழி தனைத்
தாண்டா காமமும் ஓர் அழகு
!
தாய் என்னும் நிறைவு அழகு, தாரம்
அது மீதி அழகு !
- - சுந்தர்.ப
No comments:
Post a Comment