துயில் தின்னும் கவிதைத் தும்பிகளின் சிறகு ஒடித்தே என் நடுநிசிகள் தீர்ந்து போகின்றன !! -சுந்தர்.ப
Nov 27, 2014
Nov 26, 2014
அழகு என்னும் ஓர் அழகு !!
மீட்டும்
விரல் அழகு,
உயிர் உருகும் யாழிசை ஓர்
அழகு !
குவளைக்
காதழகு,
அவள் இதழ் பதித்தாள் தேநீர்ச்
சுவை அழகு !
பூப்பில்
பெண் அழகு,
முந்திக்
கொள்ளும் தாய்மை என்னும் பேரழகு !
மொளனம்
ஓர் அழகு,
அதில் விழி பேசும் மொழி
அழகு !
மழலை குறும்பு அழகு,
துயில்கையில்
தும்பைப் பூ அழகு !
நித்திரையில்
மதி அழகு, சொப்பணம் நூறழகு
!
மழைக் கால முற்றங்களும்,
மணக் கோல தோரணங்களும் என்றும்
அழகு !
நோய்க்கு
மருந்தழகு,
உறவின் கதகதப்பில் நோயும்
ஓர் அழகு !
தனிமை ஓர் அழகு, தோள்
சாய்ந்தால் ஈரழகு !
பால் குட நீர் அழகு,
பசி என்றும் பேரழகு !
முதுமை
முழு அழகு,
மழலை விரல் நனைத்தாள் கூடும்
ஓர் அழகு !
நட்பென்னும்
தேர் அழகு,
நின்றாலும்
நகர்ந்தாலும் பேரழகு !
திருவிழாக்
காலங்களும்,
திரி சங்கு மடங்களும் நினைத்தாலே
அழகு !
வாழ்வை
அழகாக்கும் காதல் என்னும் தீ
அழகு !
கண்ணீர்த்
துளி அழகு, காரணங்கள் ஒத்தி
வைத்தாள் !
திருமணத்
தோள் என்றும், துறவுக்கு முன் அழகு !
இரவின்
நிறம் அழகு, நித்திரைக்குள் நிலவு
அழகு !
தூரத்து
ஊர் அழகு, மழைக் குடைக்குள்
குளிர் அழகு !
கோப,தபங்களும் சிறு நேரம் தான்
அழகு !
கடை விழி தனைத்
தாண்டா காமமும் ஓர் அழகு
!
தாய் என்னும் நிறைவு அழகு, தாரம்
அது மீதி அழகு !
- - சுந்தர்.ப
மகள் என்னும் மழை அழகு !!
மழையும் என் மகளும் ஈரழகு!! ஊன்
கலந்தால் நூறழகு !!
பால் மணம் வழிந்தோடும் தும்பைப்
பூம்விரல்கள் - (மகள்)
மண் மணம் உயிர்ஜெனிக்கும்
ஆதாரத் தேன் துளிகள் – (மழை)
மழலை மொழியாவும்
மதி தின்னும் மாருதங்கள் - (மகள்)
அடி வானின் நற்றனமாய்
முனுமுனுக்கும் மத்தளங்கள் - (மழை)
சீன்டலும் தீண்டலுமாய் ஒரு நூறுப் பொற்க்கரங்கள் - (மகள்)
அள்ளி நெஞ்சனைக்கும்
ஆயிரம் மழைத் துளிகள் - (மழை)
வாழ்வில் அர்த்தப்படும்
அழகிய மணித்துளிகள் - (மகள்)
சாரலின் கோர்வையில்
தோல் உரிக்கும் நீர் நிலைகள் - (மழை)
பூப்பின் பூரணமாய்
தாமரை மதி முகங்கள் - (மகள்)
கார்மேகம் அடைத்து
ஒழுகும் அடை மழைத் தோரணங்கள் - (மழை)
நிறம் மாறும் பூவனமாய்
தினம் ஒரு முகம் புனைந்து,
மகள் என்னும் பாத்திரத்தை
புடம் செய்யும் பெண் இனம் - (மகள்)
திசை மாறும் பருவங்களின்
திரை மூடும் மதி போல,
தினம் ஒரு புதுத்
துளியாய் சுரம் சேர்க்கும் யாழினம் - (மழை)
திருமணம் எனும்
ஓர் மலர் பூனும் மான் இனம்,
அவள் கோலம் அழகென்னும்
அட்சையம் - (மகள்)
கடை விழி அலை ஆடும்
குளக்கரையின்,
மழை விரிப்பில்
ஈடாகும் அழகு ஏது - (மழை)
மகள் என்னும் மகள்
ஈந்த - மழலை
முடிச்சு ஒன்று,
கரம் ஏற்றி விழி நிறைக்க,
முன் ஜென்ம நியாபகமாய்
மகரந்த மழை நனைந்து,
என் தாயின் கதகதப்பில்
அடை காணும் முடிச்சானேன் - (மகள்)
மழை அழகு, மகள்
அழகு,
ஓர் மழைக் கால
பின் பொழுதில் நிழலாடும் நினைவு அழகு !!
- - சுந்தர்.ப
Subscribe to:
Posts (Atom)