“ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் “
v மழைக் கால மனக்குழியின் ,
மண்வாசம் கூச்சரிப்பாய் !
v தும்பை பூஞ்சிரிப்பின்
அதிகாலை பாய் விரிப்பாய் !
v மெளனத் தேன் தெளிக்கும்,
அன்பென்னும் ஓர் செண்பகப் பூ !
v கருவறை கானங்களை விரல் நுனி
விருந்தாக்கும் அன்னை மனம் !
v மழலை முகம் யாவும் மகள் என்னும்,
சுருதி சேர்க்கும் தந்தை குணம் !
v எட்டாப் பொருளாய் பசிப்பிணி
தீர்க்கும் தெய்வப் பதம் !
v பயிர் வாட , மனம் வாடும் மார்க்கங்களின்
பிள்ளை முகம் !
v ஏழ்மை தோள் தாங்கும் தோழன்
என்னும் தேரின் திடம் !
v கரம் நோக கொடை ஈனும்
அறம் சேர் மன்னர் இனம் !
v இரத்த சொந்தங்களின் எல்லை தாண்டி அன்பில்
பதைப் பதைக்கும் ஏழை குணம் !
v சாதி மாத ஆழிகளின் இடை தாண்டி
அடி வானில் அர்த்தப்படும் அன்பின் நிறம்
!
v அன்பு என்னும் மூர்க்கத்தை அடிநாத வலை விரிப்பாய்
உயிர் காக்கும் பூமித்தாயின் பால் மணம் !
-சுந்தர்.ப